25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
மாம்பழங்களின் வரத்து அதிகரித்து உள்ளது, ராஜபாளையம் பகுதிகளில் ….. >> ராஜபாளையம்-தென்காசி சாலையில் அமைந்துள்ள புதுப்பாளையம் பெரிய மாரியம்மன் கோவிலில் பூக்குழி திருவிழா. >> ராஜபாளையம் காந்தி கலை மன்றத்தில் புத்தக கண்காட்சி . >> ராஜபாளையம் 6-வது மைல் தேக்கத்தில், வெயிலின் தாக்கத்தால் நீர்மட்டம் குறைந்து 8 அடி மட்டும்தான் தண்ணீர் உள்ளது. >> சித்திரை மாதம்,தமிழ்ப்புத்தாண்டை முன்னிட்டு விருதுநகர் மாவட்டத்தில் உள்ள கோயில்களில்  திரளான மக்கள் சுவாமி தரிசனம் செய்தனர். >> திடீரென்று பெய்த பலத்த மழையால்  ராஜபாளையம் மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர். >> திருக்கல்யாண உற்ஸவ எட்டாம் நாள் ,ஸ்ரீவில்லிபுத்துார் ஆண்டாள் கோயிலில் இன்று ஆண்டாள், ரெங்கமன்னார் திருக்கல்யாணம் நடக்கிறது. >> இராஜபாளையம் சக்தி கண் மருத்துவமனை இப்பொழுது ஸ்ரீவில்லிபுத்தூர் நகரிலும் கோலாகல திறப்பு விழா. >> கண் கூசும் ஒளி பொருத்தப்பட்ட, வாகனங்களுக்குரூ.5 ஆயிரம் அபராதம். >> ராஜபாளையம் கோதண்ட ராமசாமி கோயில்  பிரம்மோற்ஸவ கொடியேற்றம். >>


 போதையில்லா தமிழத்தை  உருவாக்குவோம்.
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

 போதையில்லா தமிழத்தை உருவாக்குவோம்.

புது வருடம் பிறக்கிறது. இந்த வருடத்திலிருந்து நாம் இப்படி நடந்து கொள்ளவேண்டும். இனிமேல் நல்ல விஷயங்களை மட்டுமே செய்ய வேண்டும். 'நாம் நம் குடும்பம் இந்நாட்டில் நன்றாக வாழ வேண்டும்' இப்படி எல்லாம் ஒரு சிந்தனை புது வருடம் பிறப்பில் அனைவருக்கும் வருவது சகஜமே !நியூ இயர் அன்று ஏன்? போதை பற்றிய கெட்ட செய்தியை கூறுகிறீர்கள் என்கிறீர்களா?. இந்த வருடம் தவற விட்டால் நம் வாரிசுகள் போதையில் மூழ்கிவிடுவார்கள். நாம் விழித்துக்கொள்ள வேண்டும் என்பதே எங்கள் கருத்து.

நீங்கள் உங்கள் குடும்பம் மாத்திரம் நன்றாக இருந்தால் போதுமா ? உங்களைச் சுற்றி என்ன நடக்கிறது என்று எப்பொழுதாவது நினைத்தது உண்டா ?. நாம் நம்முடைய தலைமுறைகள் நன்றாக இருக்க வேண்டும் என்றால், நாட்டுப் பற்று கட்டாயமாகத்தேவை இல்லையா ?.காலையில் எழுந்து நம் கடமைகளை சரியாக நாம் மட்டும் செய்தால் போதுமா ? .வெளியே என்ன நடக்கிறது, போதையில் எத்தனை பேர் ரோட்டில் சுயநினைவின்றி பிணத்தைப் போல இருக்கிறார்கள். ஏன் இவர்கள் குடிக்கும், போதை மருந்திற்கும், அடிமையாகி உள்ளனர். 

ஆண்கள் குடித்தார்கள் இந்த அரசு கண்டுகொள்ளவில்லை .பெண்களும் குடிக்கின்றார்கள் அதையும் கண்டு கொள்ளவில்லை. சிறார்கள் குடிக்கிறார்கள் அதையும் கண்டு கொள்ளவில்லை. இது இப்படியே சென்று கொண்டிருந்தால் அடுத்து மீதம் உள்ளவர்கள் யாரோ அவர்களும் பாதிப்படைவார்கள்.அரசாங்கம் டாஸ்மார்க் கடைகள் திறந்து,  நினைத்த நேரம் வாங்கும் வசதியைச் செய்துள்ளது. அதுவும் சரியான இடத்தில் மக்கள் கூடும் இடத்தில் இக் கடைகள் உள்ளன. பெரிய பதவியில் இருப்பவர்களும், சாதாரண விவசாயிகள் வரை குடிப்பதற்கு வசதியாக இக் கடைகள் .இதையெல்லாம் நாம் பார்த்து, குடிச்சே அழிந்து போவான், நமக்கு எதற்கு வம்பு, என்று அதை பெரிது படுத்தாமல் விட்டு விட்டோம்.

இப்பொழுதோ  நம் தலையில் பேரிடி போல, பள்ளிகளில், கல்லூரிகளில் பரவலாக உபயோகிக்கப்படும் போதை மருந்துகள். நம் குழந்தைகளைக் குறிவைத்து வியாபாரம் செய்துகோடீஸ்வரர்கள் உருவாகின்றனர். குழந்தைகள் சாப்பிடும் போதைப் பொருள்  கலந்தசாக்லேட், ஐஸ்கிரீம்,கல்லூரிகளில் விற்கப்படும் போதைப் பொருளால், நம் தலைமுறைகள் சீரழிந்து வருகின்றனர். கேரளாவைச் சேர்ந்த ரிடையர்ட் I.P.S. மகன் போதைப் பொருள் விற்பனை செய்வதை காவல்துறை கைது செய்துள்ளனர். 24 வயதே ஆன சங்கீதா என்ற பெண் திருமண வாழ்க்கை பிடிக்காமல் விவாகரத்து செய்து விட்டு, மும்பையில் உள்ள ஆண் நண்பர்களிடம், போதைப் பொருள் வாங்கி விற்பனை செய்து வசதியான வாழ்க்கை வாழ்ந்து வரும் நிலையில் பிடிபட்டுள்ளார். கஞ்சாவிற்கும் தொழிலுக்கு ஆண்கள் மட்டுமல்ல, பெண்களும் உடந்தை.

சமீபத்திய செய்தி தமிழகம் முழுதும், உயர் ரக கஞ்சா சப்ளை செய்த மற்றும் இலங்கைக்கும் கடத்திய பெண் தாதா ஆந்திராவில் கைது செய்யப்பட்டார். பெங்களுரு ஐ.டி நிறுவனத்தில் பணிபுரிந்த இவருக்கு துணையாக இருந்த ஏழு பேரும் கைதாகினர். இது தவிர பெங்களுருவில் நடத்தப்பட்ட சோதனையில் 58 கோடி ரூபாய் மதிப்புள்ள போதை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன. கோவையில் மீண்டும் போதை ஊசிகலாச்சாரம் தலை தூக்கியுள்ளது. ஒரு பள்ளி மாணவி பள்ளியின் வகுப்பறையில் குடித்ததாக செய்தி, என்னசெய்வதுபெற்றோர்களே உங்கள்குழந்தைஅப்படிஎல்லாம்செய்யமாட்டான்என்றுகனவிலும் எண்ணாதீர்கள், குழந்தைகளை சந்தேகப் பட வேண்டாம். ஆனால் அவர்கள் செய்யும் ஒவ்வொரு செயலையும் கவனியுங்கள். அலட்சியப் படுத்தினால் உங்கள் குழந்தையின் எதிர்காலத்தை அதல பாதாளத்தில் தள்ளிவிடும்.

இப்பொழுது போதையில்லா தமிழகம் உருவாக்க வேண்டும்,என்று பள்ளிகளின் இருபக்கங்களில் 100 மீட்டர் இடைவெளியில் போதைப் பொருள்கள் விற்கும் கடைகள் இருக்கக் கூடாது என காவல் துறையினர் நடவடிக்கை எடுத்து வருகின்றனர். நகர்ப்புறம் மற்றும் கிராமப்புறங்களில் உள்ள சிறுவர்களையே போதைப்பொருள் வியாபாரிகளின் இலக்காக இருப்பதற்கான வாய்ப்புகள் அதிகம் என்பதால், பாடசாலைகளைச் சுற்றி அடிக்கடி சோதனை நடத்தி, சட்டத்தின் கீழ் அவர்களைக் கொண்டுவர முயற்சிகள் எடுக்கப்பட வேண்டும்.நம் நகரின் அருகில் உள்ள சேத்தூர் கிராமத்தில் இருபதாயிரம் மக்கள் தொகையினர் விவசாயத்துறையில் உள்ளனர். இந்த ஊரில் பஸ் ஸ்டாண்ட் அருகேயே டாஸ்மார்க் கடைகள் ,மக்களின் மிகுந்த எதிர்ப்பையும், மீறி நடைபெற்றுக்கொண்டிருக்கிறது. இதையும் காவல்துறை கவனிக்க வேண்டுமல்லவா ? 

 

ரஷ்யாவில் ஒரு கால கட்டத்தில் எல்லா தெருக்களிலும் மது விற்கும் கடைகள்இருந்தன. மக்களும் குளிருக்காக குடிக்கிறேன் என்று மது போதைக்கு 80% பேர் அடிமையானார்கள். இதை எப்படி தவிர்ப்பது என்று அரசாங்கம் யோசித்து, 50 km-க்கு ஒரு கடை என்று, எல்லா தெருக்களிலும் உள்ள மது விற்கும் கடைகளை அகற்றியது, ரஷ்ய அரசாங்கம். .தொலை தூரத்திற்குசென்று மது வாங்க முடியாமல் குடிப்பதை பலர் நிறுத்தியதாக அப்பொழுது கூறியதுஅரசாங்கம். எளிதாக இருந்தால் மது வாங்குவதை நிறுத்த முடியாது அல்லவா ? நம் அரசாங்கமும் இதை அமல் படுத்தினால் நல்லது தானே ! 

 

சந்தேகத்திற்குரிய போதைப் பொருள் விற்பவர்கள் தென்பட்டால், உடனடியாக நாம் விழித்துக் கொண்டு,அதைத் தவிர்க்க என்ன செய்ய வேண்டுமோ, அதை மக்களாகிய நாம் அனைவரும் சேர்ந்து செய்தால் தான், வரும் தலைமுறையினரை பாதுகாக்க முடியும். 2026 ஆம் ஆண்டு போதையில்லா தமிழகம் என்ற விழிப்புணர்வுடன் நாம் புத்தாண்டை எதிர் கொள்வோம் மக்களே விழித்துக் கொள்ளுங்கள், இல்லாவிட்டால் நம் தலைமுறையினர் நமக்கு முன்னே போதையில் அடிபட்டு பரலோகம் சென்று விடுவார்கள், உருவாக்குவோம் போதையில்லா தமிழத்தை !

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News